வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-04-27 21:45 GMT
திருச்செந்தூர்,

ஆறுமுகநேரி காந்தி தெருவைச் சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மகன் வனராஜா (வயது 25). இவர் கோவையில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் வனராஜா ஆறுமுகநேரியில் உள்ள தன்னுடைய அக்காள் கோமதியின் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் அருகே இளையபெருமாள்விளையில் உள்ள தன்னுடைய பெரியம்மா காசிக்கனி வீட்டுக்கு சென்றார். அங்கு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வனராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த வனராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எட்டயபுரம் அருகே தோள்மாலைபட்டியைச் சேர்ந்தவர் தங்க மாரியப்பன் (46) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி தன்னுடைய 2 குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் தங்க மாரியப்பன் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் நேற்று மாலையில் அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் சீமை கருவேல மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த தங்க மாரியப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்