காதல் தகராறில் விபரீதம் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து நர்சுக்கு சரமாரி கத்திக்குத்து

காதல் தகராறில் விபரீதம் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த வாலிபர் அங்கு பணி செய்த நர்சை சரமாரியாக உடலில் பல்வேறு பகுதிகளில் குத்தி விட்டு தப்பிச்சென்று விட்டார்.

Update: 2019-04-27 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த எச்சூர் பெரிய தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் ஜெயந்தி (வயது 19). காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் நர்சு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். இவர் காஞ்சீபுரம் பரமசிவம் தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் ஜெயந்தியை சரமாரியாக உடலில் பல்வேறு பகுதிகளில் குத்தி விட்டு தப்பிச்சென்று விட்டார்.

இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் ஜெயந்தியை கத்தியால் குத்தியது வண்டலூரை சேர்ந்த முத்து (வயது 25) என்பதும் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கடந்த ஒரு வார காலமாக இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்