கருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
கருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.
சேலம்,
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை, துணை ராணுவம், சிறப்பு காவல் படை மற்றும் உள்ளூர் போலீசார் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ரோகிணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது கருப்பூர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில், மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றார். பின்னர் அவர், சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், சீல் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குள் யாரும் செல்லாத வகையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு கலெக்டர் ரோகிணி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, கூடுதல் துணை கமிஷனர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.