குடும்ப உறுப்பினர்களுக்கு தேர்தல் டிக்கெட்: சரத்பவார் மீது உத்தவ் தாக்கரே தாக்கு
தேர்தலில் குடும்ப உறுப்பினர்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கியது பற்றி சரத்பவார் மீது உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்தார்.;
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பர்பானி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.
இதேபோல கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரின் மகனும், சரத்பவாரின் பேரனுமான பர்த் பவாருக்கு மாவல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவல் தொகுதியில் சிவசேனா வேட்பாளர் ஸ்ரீரங் பர்னேவை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
சரத்பவார் தேர்தல் டிக்கெட் வழங்கும்போது அவரது குடும்பத்தை மனதில் வைத்து கொண்டு செயல்பட்டு உள்ளார். தான் இல்லாவிட்டால் தனது மகன்.. மகன் இல்லாவிட்டால் தனது மருமகன்... இப்படி தான் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா?. சத்தாராவில் நாங்கள் ஒரு சுமைதூக்கும் தொழிலாளியின் மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.