தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை; 7 பேர் கைது

காஞ்சீபுரம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2019-04-26 21:05 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி, பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், காஞ்சீபுரம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் போலீசாருடன் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது, காஞ்சீபுரம் பஸ் நிலையம், வணிகர் வீதி, இரட்டை மண்டபம் உள்பட பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் போலீசாரை பணி செய்யவிடாமல் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையொட்டி பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சீபுரம் காமாட்சியம்மன் சன்னதி தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 40), மதுராந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரதாப் (20), கவரைத்தெருவை சேர்ந்த பார்த்திபன் (27), வணிகர் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (52), வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணாகரன் (42), காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி சந்து பகுதியை சேர்ந்த ஜெகன் என்கிற ஜெகநாதன் (47), பஞ்சுப்பேட்டை தெருவை சேர்ந்த சுதாகரன் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் கோவிந்தன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்