நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கருவூலக அலுவலகம் கட்டும் பணி தீவிரம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூலக அலுவலகம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2019-04-25 21:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூலக அலுவலகம் மிகவும் பழுது பட்டு உள்ளது. அதை புதுப்பித்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ரூ.3 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் கருவூலக அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. 3 மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.

அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி நடந்தது. தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார்.

இதை தொடர்ந்து நவீன தொழில் நுட்பத்துடன் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வந்தன.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின், பணியில் தேக்கம் ஏற்பட்டது. தேர்தல் முடிந்த பின் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற் காக 10 அடி நீளத்தில் அகலமான குழி தோண்டப்பட்டு உள்ளது. எந்திரம் மூலம் மண் அள்ளும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய கட்டிடம் கட்டி முடிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்