தஞ்சை அரண்மனை சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
காவல் கோபுரத்துடன் கூடிய தஞ்சை அரண்மனை சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.;
தஞ்சாவூர்,
தஞ்சையை முத்தரையர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சி செய்துள்ளனர். சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் தஞ்சை பெரியகோவில், பெரியகோட்டை சுவர், சின்ன கோட்டை சுவர் ஆகியவை கட்டப்பட்டன. பெரியகோவிலை சுற்றிலும் சின்ன கோட்டை சுவர் உள்ளது. இதில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் விழுந்து, செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. பெரியகோட்டை சுவர் அருகே வீடுகள் கட்டப்பட்டு மக்கள் வசித்து வருகின்றனர்.
சோழ மன்னர்கள் ஆண்ட தஞ்சையில் 16-ம் நூற்றாண்டில் நாயக்கர்களின் ஆதிக்கம் தொடங்கியது. அவர்களது ஆட்சி காலத்தில் தான் தஞ்சையில் அரண்மனை கட்டப்பட்டது. அந்த அரண்மனை இன்றைக்கும் தஞ்சை கீழராஜவீதியில் உள்ளது.
நாயக்க மன்னர்களான செவ்வப்பநாயக்கரால் கட்ட தொடங்கப்பட்ட அரண்மனை கட்டும் பணி, ரகுநாத நாயக்கரால் தொடரப்பட்டு, விஜயராகவ நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்டது. அவர்களுக்கு பிறகு தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களால் அரண்மனை மேலும் விரிவுபடுத்தப்பட்டது. மராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டிடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன.
பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டீஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டிட கலை தொழில்நுட்பங்களுடன் தஞ்சை அரண்மனையில் சில பகுதிகள் வடிவமைக்கப்பட்டன. இந்த அரண்மனை வளாகம் 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் 75 சதவீதம் அழியாமல் இருக்கிறது. அரண்மனையில் மன்னர்களின் அரசவை, அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள என பார்க்க வேண்டிய அம்சங்கள் ஏராளம் உள்ளன.
அரண்மனை வளாகமானது தர்பார் மண்டபம், மணிமண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என 4 முதன்மை கட்டிடங்களை கொண்டுள்ளது. மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்தன. இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாக பயன்பட்டிருக்கலாம். பல வண்ணங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. ஆயுத சேமிப்பு மாளிகையானது கோபுர வடிவில் காணப்படுகிறது.
தற்போது அரண்மனை வளாகத்தில் சரசுவதிமகால் நூலகம், கலைக்கூடம், தீயணைப்பு நிலையம், மேற்கு போலீஸ் நிலையம், அரசர் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் பயிற்சி பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத்துறை ஆகியவை இயங்கி வருகின்றன. அரண்மனையை சுற்றிலும் 50 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவரில் ஆங்காங்கே காவல் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு வேலைபாடுகளுடன் கூடிய இந்த கோபுரங்களில் வீரர்கள் நின்று காவல் பணியை மேற்கொண்டனர்.
மேலும் அவர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் அந்த கோபுரத்தில் செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கும் அரண்மனை சுற்றுச்சுவர் இருந்தாலும் முறையாக பராமரிப்பு இன்றி உள்ளது. கீழராஜவீதியில் நுழைவு பகுதியில் மட்டும் சுற்றுச்சுவரில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆனாலும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.
தஞ்சை காமராஜர் மார்க்கெட் பகுதியில் உள்ள அரண்மனை சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதையொட்டி அமைந்துள்ள காவல் கோபுரங்களும் முறையாக பராமரிப்பு இல்லாததால் சிதிலம் அடைந்து வருகின்றன. அரண்மனை சுற்றுச்சுவரை ஒட்டி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதுடன், கழிவறை போல பயன்படுத்தப்பட்டு வருகிறது. மன்னர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் தஞ்சை அரண்மனை வரலாற்றின் பொக்கிஷம் ஆகும். இன்றைக்கு இப்படிப்பட்ட அரண்மனையையோ, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய காவல் கோபுரங்களையோ, சுற்றுச்சுவரையோ கட்டுவது எளிதானது அல்ல.
ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களையாவது பேணி காக்க முன்வர வேண்டும். அரண்மனை சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து விட்டால் அவற்றை போல் மீண்டும் கட்ட முடியாது. அவைகள் அப்படியே இடிந்ததாகவே இருந்துவிடும். எனவே அடுத்த தலைமுறையினரும் தஞ்சையை ஆண்ட மன்னர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் அரண்மனையையும் அதன் சுற்றுச்சுவரையும் சீரமைத்து பேணி காக்க தொல்லியல்துறையிரும், மாநகராட்சி நிர்வாகமும் முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறும்போது, தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை எங்கே இருக்கிறது? என நம்மால் உறுதியாக கூற முடியவில்லை. பெரியகோவிலை தான் அரண்மனையாக பயன்படுத்தி இருப்பார்களா? அல்லது சீனிவாசபுரத்தில் அரண்மனை இருந்ததா? என பல்வேறு கேள்விகளை கேட்டு கொண்டு இருக்கிறோம். ராஜராஜசோழன் சமாதி எங்கே இருக்கிறது? என ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இருப்பவற்றை பேணி காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. இருக்கும் கட்டிடங்களை அழியவிட்டுவிட்டு பின்னர் ஆய்வு என செய்வது தேவையில்லாத ஒன்று. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகரில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை அரண்மனையை சீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தஞ்சை அரண்மனை சுற்றுச்சுவரை பேணி காக்க நடவடிக்கை எடுப்பதுடன், ஆக்கிரமிப்பில் உள்ள அரண்மனைக்கு சொந்தமான இடத்தையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.