தூத்துக்குடியில் 5-ந்தேதி நடக்கும் வணிகர் தின மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்

தூத்துக்குடியில் 5-ந்தேதி நடக்கும் வணிகர் தின மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.

Update: 2019-04-25 22:45 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள வணிகர் மகாலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன், பொருளாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் ஜெயபால், அப்துல் நஷீர், பார்த்தசாரதி, ரவி, திலகர், பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அடுத்தமாதம்(மே) 5-ந்தேதி தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் வணிகர் தினவிழாவையொட்டி சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 200 வாகனங்களில் சென்று திரளான வணிகர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் அனைவரும் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்