கீழ்கட்டளையில் பரிதாபம் கணவன் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

கீழ்கட்டளையில், கணவன் இறந்த சோகத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-25 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கீழ்கட்டளை டாக்டர் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 64). இவருடைய மனைவி பவானி (55). கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியன், உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.

கணவன் இறந்த சோகத்தில் இருந்துவந்த பவானிக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனால் கணவரை இழந்த விரக்தியில் பவானி, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல் ஆதம்பாக்கம் கேசரி நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(69). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். நேற்று முன்தினம் இரவு மகனுடன் குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த சீனிவாசன், தனது அறைக்கு சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.

நீண்டநேரம் கதவை தட்டியும் அவர் திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சீனிவாசன், மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்