கோவில்பட்டி அருகே சூறைக்காற்றில் 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன விவசாயிகள் வேதனை
கோவில்பட்டி அருகே சூறைக்காற்றில் 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன. இது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல், ஆண்டிப்பட்டி, ஜமீன் தேவர்குளம், வெங்கடாசலபுரம், முடுக்கலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் ஏராளமான விவசாயிகள், வாழை பயிரிட்டு உள்ளனர். தற்போது பெரும்பாலான வாழை மரங் கள் குழை தள்ளி, அறுவடைக்கு தயாராக இருந்தன.
இந்த நிலையில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்கள், சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அப்போது பலமாக வீசிய சூறைக்காற்றில் அப்பகுதியில் பயிரிடப்பட்ட சுமார் 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து விழுந்து சேதம் அடைந் தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சூறைக்காற்றில் சாய்ந்த வாழைகளை தோட்டக்கலைத்துறை அலுவலர் சரவணகுமார், பாரதீய விவசாய சங்க மாநில தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, பொதுச்செயலாளர் பரமேசுவரன் மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டனர். சூறைக்காற்றில் சாய்ந்த வாழைகளுக்கு தலா ரூ.300 இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.