மோடியை வீழ்த்துவது மக்களின் மனநிலையாக இருந்தாலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறைகேடு கவலை அளிக்கிறது எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு
தேர்தலில் மோடியை வீழ்த்துவது தான் மக்களின் மனநிலையாக இருந்தாலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நடக்கும் முறைகேடு கவலையளிப்பதாக மும்பையில் கூட்டாக பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று கட்ட தேர்தல் நேற்றுடன் முடிந்தது. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பயன்பாடு மீது எதிர்க்கட்சிகள் சந்தேகப் பார்வையுடன் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் மும்பையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
அப்போது தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அவற்றில் சுலபமாக தில்லுமுல்லு செய்ய முடியும். அவ்வாறு முறைகேடு செய்து தான் பா.ஜனதா ஓட்டுகளை பெறுகிறது. 191 நாடுகளில் 18 நாடுகளில் மட்டும் தான் மின்னணு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடக்கிறது. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகளில் 3 நாடுகளில் மட்டுமே இந்த வாக்குப்பதிவு முறை உள்ளது. மற்ற 7 நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்தியாவிலும் பழைய வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்தலாம்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசுகையில், மோடி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை சந்தித்து உள்ளது. எனவே மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடப்பது தான் கவலையளிப்பதாக உள்ளது” என்றார்.
“வி.வி.பாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளில் 50 சதவீதத்தை எண்ணி சரிபார்க்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அது தேவையற்ற கோரிக்கை என்று கூறுவதில் அர்த்தம் இ்ல்லை” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.
தேர்தல் கமிஷனை திருதராஷ்டிரன் என்று விமர்சித்த ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சஞ்சய் சிங், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும், அந்த ஓட்டுகள் பா.ஜனதாவுக்கே விழுவதாக குற்றம்சாட்டினார்.
பேட்டியின் போது தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உடன் இருந்தனர்.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் ஒப்புகை சீட்டு எந்திரமான ‘வி.வி.பாட்’ இந்த தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒப்புகை சீட்டு 3 விநாடிகள் மட்டுமே காட்டப்படுகிறது. அதை நிச்சயம் 7 விநாடிகளாக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.