பண்ருட்டியில் களைகட்டியது பலாப்பழம் சீசன் - ஒரு டன் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை

பண்ருட்டியில் பலாப்பழம் சீசன் களைகட்டியது. ஒரு டன் பலாப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2019-04-23 22:45 GMT
பண்ருட்டி, 

மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகளாகும். முக்கனிகளில் 2-வது இடத்தை பிடித்திருப்பது பலாப்பழம். தித்திக்கும் தேன் சுவையே இதன் தனிச்சிறப்பு ஆகும். மேல்தோல் கரடு முரடாக காட்சி அளித்தாலும் உள்ளே இருக்கும் சுளைகள் தித்திக்கும் தேன் சுவையோடு இருப்பதால் மற்ற பழங்களை காட்டிலும் இதற்கு மவுசு அதிகம்.

ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டது மான பலாப் பழத்துக்கு பெயர் பெற்றது பண்ருட்டிதான். செம்மண் பாங்கான பூமியான பண்ருட்டி, பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, மாளிகம்பட்டு, கீழக்குப்பம், நடுக்குப்பம், பிள்ளையார்குப்பம், கீழ்மாம் பட்டு, மேல் மாம் பட்டு, காடாம்டபுலியூர், மருங் கூர், காட்டுக்கூடலூர், சிறுதொண்டமாதேவி, தாழம் பட்டு, காளிக்குப்பம், நடுவீரப் பட்டு, புலியூர் காட்டுசாகை, அரசடிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் 800-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில்தான் பலாப்பழ சீசன் களை கட்டும்.

இந்த ஆண்டு பலாப்பழம் சீசன் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது பலாப்பழம் சீசன் களை கட்டத் தொடங்கி யுள்ளதால் சென்னை- கும்ப கோணம் சாலை யோரத்தில் பண்ருட்டியில் இருந்து நெய்வேலி வரை தற்காலிக கடைகள் முளைத்துள்ளதை காணமுடிகிறது. அதில் பலாப்பழமும், முந்திரியும் விற்பனை செய்யப்படுகிறது. பலாப்பழத்தின் அளவுக்கு தகுந்தார்போல் விலை நிர்ண யம் செய்யப்படுகிறது. ஒரு பலாப்பழம் 100 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பண்ருட்டி பஸ் நிலையம், கடலூர் உழவர் சந்தையிலும், பஸ்கள், ரெயில்களிலும் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யாததால் பண்ருட்டி பகுதியில் உள்ள பலா மரங்கள் குறைந்த அளவே காய்த்துள் ளன. விளைச்சல் குறைந்திருந்த போதிலும் அறுவடை செய்யப் படும் பலாப்பழங்கள் விற் பனைக்காக வேன்கள், மினி லாரிகள், மாட்டு வண்டிகள் மூலம் தினமும் பண்ருட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் விற்பனைக்காக குடோன் களில் பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பண்ருட்டியில் உள்ள மொத்த வியாபாரிகள் பலாப் பழங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கி வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக் கின்றனர். பண்ருட்டியில் இருந்து மும்பை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும், தமிழகத் தின் மற்ற பகுதிகளுக்கும் தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். மேலும் பல வியாபாரிகள் பண்ருட்டிக்கு வந்து, பலாப் பழங்களை வாங்கிச் செல் கிறார்கள். மழையில்லாததால் பலா மரங்களில் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பலாப்பழங்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆம் கடந்த ஆண்டு விவசாயி களிடம் இருந்து ஒரு டன் பலாப்பழம் ரூ.20 ஆயிரத்துக்கு வியாபாரிகள் வாங்கினர். ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் பலாப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு வாங்கப்படுகிறது.

அதேபோல் கடந்த ஆண்டு ரூ.150 முதல் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பலாப்பழம்(நடுத்தரம்), தற்போது ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பலாப்பழங்கள் விளைச்சல் குறைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணம் பொய்த்துப்போன மழைதான். விளைச்சல் குறைவானதன் காரணமாக பலாப்பழத்தின் விலை உயர்ந்துள்ளது. நல்ல விளைச்சலின்போது இது போன்ற விலை இருந்தால் நன்றாக இருக்கும் என்றனர். 

மேலும் செய்திகள்