ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல்: தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆலோசனை

இடைத்தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2019-04-23 22:00 GMT
ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி, வருகிற 29-ந்தேதி வரை நடக்க உள்ளது. 30-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. அடுத்த மாதம் 2-ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறுதல், அன்று மாலை 3 மணிக்கு பின்னர் சின்னம் ஒதுக்கீடு, அதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

2-ந்தேதி முதல் முக்கிய பிரமுகர்கள் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் நேற்று மதியம் ஓட்டப்பிடாரம் வந்தார். அவர் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவலிங்கசேகர், ஞானராஜ், அன்னபாலா, முத்துபாண்டியன், சண்முகவடிவு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்