முப்படைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கடற்படை அதிகாரிகள் வருகை

முப்படைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கடற்படை அதிகாரிகள் நேற்று புதுச்சேரி வந்தனர்.

Update: 2019-04-23 22:30 GMT

புதுச்சேரி,

புனேவில் ராணுவத்தினருக்கான என்ஜினீயரிங் கல்லூரி (மரைன் இன்ஸ்டியூட்) உள்ளது. இங்கு பணிபுரியும் 13 அதிகாரிகள் கமாண்டர் நிலேஷ் ஜார்ஜ் தலைமையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று கடற்படை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இளைஞர்களை கடற்படையில் சேர அறிவுறுத்துவது, முப்படைகளின் நன்மைகள், கப்பல் படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றுவது குறித்து அவர்கள் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சென்னை வந்த இந்த குழுவினர் நேற்று புதுச்சேரி வந்தனர்.

அவர்களை புதுவை முன்னாள் கடற்படை வீரர்கள் சங்க கவுரவ தலைவர் வேணுகோபால், செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். புதுவை வந்த கடற்படை அதிகாரிகள் கடற்கரையில் இருந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அதன்பின் இந்த குழுவினர் புதுவையிலிருந்து புறப்பட்டு சென்றனர். மதுரை, ராமநாதபுரத்தில் அவர்கள் கல்லூரி மாணவர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்