வேப்பம்பட்டில் ஓட்டு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு
வேப்பம்பட்டில் ஓட்டு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஸ்ரீராம் தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் ஸ்ரீராம் வித்யா மந்திர் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வளாகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் ஓட்டு எண்ணும் மையங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கலெக்டர் அங்குள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பதிவேடுகளில் கையெழுத்திட்டார். அப்போது அவருடன் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.