கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதல் - டிரைவர் உடல் நசுங்கி பலி

வேடசந்தூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதியதில் டிரைவர் உடல்நசுங்கி பலியானார்.;

Update: 2019-04-22 22:30 GMT
வேடசந்தூர்,

மதுரையில் இருந்து சேலத்துக்கு ஐஸ்கிரீம் ஏற்றிக்கொண்டு மினிவேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த மினிவேனை மதுரையை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 28) என்பவர் ஓட்டினார். வேடசந்தூர்-கரூர் 4 வழிச்சாலையில் விருதலைப்பட்டி மேம்பாலத்தில் மினிவேன் சென்றுகொண்டிருந்தது.அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென பிரேக் போட்டு நின்றதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வேகமாக வந்த மினிவேன் கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் மினிவேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி ஸ்ரீராம் உடல்நசுங்கி இருக்கையிலேயே பிணமானார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வேடசந்தூர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வேனின் இடிபாடுகளில் சிக்கிய ஸ்ரீராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த கோவில்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்