வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை
அலகாபாத் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று அலகாபாத் வங்கி. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். செக்யூரிட்டி அதிகாரி, சிவில் என்ஜினீயர், மேனேஜர் (பயர் சேப்டி, சட்டம், ஐ.டி., செக்யூரிட்டி, சிஸ்டம் அட்மின், பிக் டேட்டா அனலைட்டிக்ஸ், மியூச்சுவல் பண்ட்), நிதி ஆய்வாளர், கம்பெனி செகரட்ரி போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.
பி.இ., பி.டெக்., சட்டப்படிப்பு, ஏ.சி.எஸ்., சி.எப்.ஏ., ஐ.சி.டபுள்.ஏ., எம்.பி.ஏ., சி.எம்.ஏ. மற்றும் முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 29-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு ஜூன் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் https://www.allahabad bank.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.