மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-04-21 22:45 GMT
விழுப்புரம்,

கோட்டக்குப்பத்தை அடுத்த சின்னகோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கார்த்திக் (வயது 35), கட்டிட தொழிலாளி.

இவர் தினமும் வேலை முடிந்ததும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் வேலை முடிந்ததும் கார்த்திக் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இதனால் கணவன்- மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் கார்த்திக்கை அவரது மனைவி அன்பரசி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திக், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்