மாடல் அழகியை கற்பழித்ததாக தனியார் விமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

மாடல் அழகியை கற்பழித்ததாக தனியார் விமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-04-21 22:20 GMT
மும்பை,

மாடல் அழகியை கற்பழித்ததாக தனியார் விமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாடல் அழகி புகார்

மும்பை அந்தேரி, ஜே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் கேப்டன் அம்மீத் அகர்வால். சிறிய ரக விமானங்களை வாடகைக்கு விடும் தனியார் விமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மீது மாடல் அழகி ஒருவர் ஒஷிவாரா போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகார் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அம்மீத் அகர்வாலுக்கு மாடல் அழகியுடன் 2015-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நெருக்கம் அதிகரித்து 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து உள்ளனர்.

வழக்குப்பதிவு

அப்போது அவர் மாடல் அழகியை கற்பழித்து அதை வீடியோ எடுத்து உள்ளார்.

இந்தநிலையில் மாடல் அழகி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று விட்டார். ஆனால் அம்மீத் அகர்வால் தான் அழைக்கும் போதெல்லாம் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஆபாச வீடியோவை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் என மாடல் அழகியை மிரட்டி உள்ளார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்