தேர்தல் முன்விரோதத்தில் மோதல் 17 பேர் மீது வழக்கு
தேர்தல் முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ஏசம்மாள். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். கடந்த 18-ந் தேதியன்று திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஏசம்மாளின் மகன் ராஜசேகர் (வயது 34) வாக்களிக்க வந்தார். அப்போது அவருக்கும் அங்கு இருந்த அதே பகுதியை சேர்ந்த அருண் (20), சுந்தர்ராஜ்(47) ஆகியோருக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ராஜசேகர் தனது நண்பர்களான சதீஷ், முரளி, தரணி, மாரி, முருகன் ஆகியோருடன் சேர்ந்து சுந்தர்ராஜ், அருண், ஹரிஷ் கிரண், உதயகுமார், அரிகிருஷ்ணன், உமா சங்கர், தினித் ஆகியோரை தகாத வார்த்தையால் பேசி கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர்.
பதிலுக்கு சுந்தர்ராஜ் தரப்பில் தாமு, கருணாகரன், ஸ்ரீதர், பாஸ்கர், ஹாரிஸ், அருண், விக்கி, ஜெனித், உமாசங்கர், ஹேமந்த், ஆனந்தன் ஆகியோர் முரளி, தரணி ஆகியோரை தகாத வார்த்தையில் பேசி கையாலும் உருட்டுக் கட்டையாலும் தாக்கினர். இதில் காயம் அடைந்த இருதரப்பையும் சேர்ந்த 9 பேர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.