தடைகாலத்தால் வரத்து குறைந்தது கோவையில் மீன் விலை உயர்வு - வஞ்சிரம் கிலோ ரூ.1,300-க்கு விற்பனை

தடைகாலம் தொடங்கியதால் வரத்து குறைந்து கோவையில் மீன் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2019-04-21 22:15 GMT
கோவை,

தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, ராமேசுவரம், நாகை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய கடலோர பகுதிகளில் பிடிக்கப்படும் மீன் ரகங்கள், லாரிகள் மூலமாக கோவை மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிக அளவில் மீன்கள் விற் பனைக்கு வருகின்றன.

கோவை மார்க்கெட்டில் இருந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் பிற பகுதிகளுக்கு மீன்கள் விற் பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆழியாறு, திருமூர்த்தி அணை மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களும் கோவையில் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அறிவிக் கப்பட்டு உள்ளது. இதனால் கோவை மீன் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மீன் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும் நேற்று ஈஸ்டர் பண்டிகையொட்டி பலரும் ஆர்வத்துடன் மீன் வகைகளை வாங்கி சென்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் சங்க நிர்வாகி அப்பாஸ் கூறியதாவது:-

மீன்பிடி தடை காலம் தொடங்கி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. இதனால் கோவைக்கு மீன் வரத்து குறைந்து விட்டது. கேரளாவில் இருந்தும் குறைந்த அளவிலேயே மீன்கள் வருகின்றன. இதன் காரணமாக மீன் விலை உயர்ந்து காணப்படுகிறது.

கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.500-க்கு விற்ற வஞ்சிரம் மீன் தற்போது ரூ.1,300-க்கும், ரூ.450-க்கு விற்ற வெள்ளை வாவல் மீன் ரூ.1,200-க்கும் விற்கப்பட்டது.

மீன்களின் விலை (கிலோ) விவரம் (பழைய விலை அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

மத்தி ரூ.150 (ரூ.50), அயிலை ரூ.300 (ரூ.120), ராமேசுவரம் நண்டு ரூ.700 (ரூ.400), நெத்திலி ரூ.350 (ரூ.150), சங்கரா ரூ.350 (ரூ.180), பாறை ரூ.500 (ரூ.300), கருப்பு வாவல் ரூ.500 (ரூ.300), இறால் ரூ.550 (ரூ.350), கொடுவா ரூ.400 (ரூ.200), ஊழி ரூ.450 (ரூ.250), விள மீன் ரூ.500 (ரூ.300)-க்கும் விற்கப் பட்டது. அணை மீன்களான கட்லா ரூ.170, லோகு ரூ.160, ரூப்சந்த் ரூ.150-க்கும் விற்பனை செய்யப் பட்டது. வரத்து குறைந்ததால் மீன்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்