வாக்களிக்க வந்தவர்களை தடுத்தவர்கள் மீது வழக்கு

காவனக்கோட்டை, ஆயங்குடி மற்றும் கீழக்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் கடந்த 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது.

Update: 2019-04-21 00:04 GMT
தொண்டி,

திருவாடானை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காவனக்கோட்டை, ஆயங்குடி மற்றும் கீழக்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் கடந்த 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது இப்பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக ஒன்று கூடி வாக்காளர்களுக்கு 100சதவீதம் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை கிடைக்க வேண்டுமென்றால் தேர்தலில் ஓட்டுப்போடாமல் புறக்கணிக்க வேண்டும் எனக்கூறி வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும், தேர்தலில் வாக்களித்தால் பயிர் இழப்பீட்டு தொகை பெற முடியாது என வதந்தியை ஏற்படுத்தியும், வாக்காளர்களிடம் அரசு அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதுடன் மீறி வாக்களிக்க வந்தவர்களை மிரட்டியதாகவும் கவ்வூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் சின்னராஜா, ஆனந்தூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பிரதிஸ்வரன் ஆகியோர் திருவாடானை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் பனிக்கோட்டை தமிழரசன், ஆயங்குடி சரவணசெல்வம் மற்றும் சிலர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

இதேபோல கடம்பூர் வாக்காளர்களை தேர்தலில் ஓட்டுப்போடாமல் புறக்கணிக்க வேண்டும் எனக்கூறி வாக்களிக்க விடாமல் தடுத்ததாக திருவாடானை போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடம்பூர் விஸ்வநாதன், சோமசுந்தரம் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்