மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அனைத்து சமுதாயத்தினரால் பங்குனி, சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

Update: 2019-04-20 23:58 GMT
ராஜபாளையம்,

இந்த ஆண்டும் கடந்த 10-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நாள்தோறும் பல்வேறு சமூகத்தினரின் சார்பில் அம்மன் பொட்டி பல்லக்கு, கண்ணாடி சப்பரம், பூத வாகனம், தண்டியல், பூச்சப்பரம் உள்ளிட்டவைகளில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அதனைத்தொடர்ந்து விரதமிருந்து காப்பு அணிந்து கொண்ட பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் எதிரே உள்ள திடலில் பூக்குழி இறங்கினர்.

பக்தர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க செயற்கை நீரூற்று அமைத்து மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்