சென்னையில் இருந்து காரைக்காலுக்கு மார்க் துறைமுக தலைவர் 283 கி.மீ. சைக்கிள் பயணம்

சென்னையில் இருந்து காரைக்காலுக்கு மார்க் துறைமுக தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டி 283 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

Update: 2019-04-20 23:00 GMT
காரைக்கால்,

காரைக்கால் மார்க் துறைமுகம், இந்தியாவின் பொறுப்பான கடல்வழி நுழைவு வாயிலில் ஒன்றாக திகழ்கிறது. இந்ததுறைமுகம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை துறைமுக அதிகாரிகள், ஊழியர் களுடன் கொண்டாடும் வகை யில் துறைமுக தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டி சென்னையில் இருந்து காரைக்காலுக்கு சைக்கிளில் பயணம் செய்தார்.

கடந்த 13-ந் தேதி சென்னையில் புறப்பட்ட அவர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, திருக்கடையூர் வழியாக 283 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து காரைக்கால் துறைமுகத்துக்கு வந்துசேர்ந்தார். அவரை துறைமுக அதிகாரி ராஜேஸ்வர ரெட்டி மற்றும் ஊழியர்கள், மகளிர் குழுக்கள், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் வரவேற்றனர்.

சைக்கிள் பயணம் குறித்து ஜி.ஆர்.கே.ரெட்டி கூறியதாவது:-

கலாசாரம், பாரம்பரியம் மிகுந்த இந்தியாவில், பல இடங்களின் நாட்டுப்புறத்தை அனுபவிக்கும் பயணமாக இது அமைந்தது. காரைக்கால் துறைமுகம் அமைய பணிகள் தொடங்கியது முதல் 13 ஆண்டு கால செயல்பாடுகள் நினைவு கூரத்தக்கவை. முதல் கப்பல் வந்தது முதல் இப்போதைய நிலை வரை பல பரிணாம வளர்ச்சியும், ஏற்றுமதி மற்றும் பொருளாதார நிலைகள், சமூக அக்கறையுடன் கூடிய செயல்பாடுகள் பேசப்பட வேண்டியதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்