கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சியில் சூரக்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களின் குடிநீர் தேவைக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்பகுதியில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மின்மோட்டார் பழுதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த நீர்த்தேக்க தொட்டி செயல்பட வில்லை. இதன் அருகில் இருந்த சிறுமின் விசை நீர்த்தேக்க தொட்டியிலும் நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீர் வருவதில்லை.
இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். தினமும் 3 கி.மீ.க்கு மேல் நடந்து சென்று வயலுக்கு பாய்ச்சப்படும் நீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை சூரக்காட்டில் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதவள்ளி, கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.