வேப்பனப்பள்ளியில் மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்தது

வேப்பனப்பள்ளியில் மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்தது.

Update: 2019-04-20 23:00 GMT
வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. வேப்பனப்பள்ளி அருகே உள்ள ராமசந்திரம் கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார்.

இந்த நிலையில் கன மழை பெய்த போது மின்னல் தாக்கி அவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் வீடும், வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் எரிந்து நாசம் ஆனது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் அசோக் வீட்டிற்கு சென்று நேற்று ஆறுதல் கூறினார்.

வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்