பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 16-வது இடம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 16-வது இடத்தை பிடித்துள்ளது.

Update: 2019-04-19 22:45 GMT
ராமநாதபுரம்,

தமிழகத்தில் நேற்று பள்ளி கல்வித்துறையின் மூலம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,467 மாணவர்களும், 7,815 மாணவிகளும் என மொத்தம் 14,282 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீத அடிப்படையில் 92.30 ஆக உள்ளது. இதுகடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு மாநில அளவில் 4-வது இடத்தில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் தற்போது 16-வது இடத்துக்கு சென்றுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறும்போது, இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்துள்ளது கவனத்தில் கொள்ளப்படும். இந்த கல்வி ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தினை முன்னுக்கு கொண்டு வருவதற்காக கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணம் குறித்து ஆராய்ந்து அதன் குறைகளை சரிசெய்து கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மாநில அளவில் இடம்பிடித்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏற்கனவே இருந்த 4-வது இடத்தில் இருந்து 16-வது இடத்திற்கு ராமநாதபுரம் மாவட்டம் தள்ளப்பட்டுஉள்ளது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்