மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில். இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

Update: 2019-04-19 22:00 GMT
மாமல்லபுரம்,

108 வைணவ தலங்களில் ஒன்று மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில். இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் தலசயன பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கார கோலத்தில் காட்சி தந்து அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளில் வந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கோவிந்தா..கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.

விழாவில் தெப்ப உற்சவ கமிட்டி தலைவர் ஜனார்த்தனம், கருக்காத்தம்மன் கோவில் தர்மகர்த்தா சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தேரோட்டத்தையொட்டி மாமல்லபுரம் நகரம் முழுவதும் நேற்று ½ நாள் மட்டும் மின் தடை செய்யப்பட்டது. மேலும் தேரோட்டத்தையொட்டி குலசேகர ஆழ்வார் ராமானுஜர் மடம் சார்பில் அதன் தலைவர் நெய்குப்பி கிருஷ்ணராமானுஜதாசன் தலைமையில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்