சிவகங்கை தொகுதியில் 70 சதவீத வாக்குப்பதிவு மானாமதுரை இடைத்தேர்தலில் 74.80 சதவீதம் ஓட்டுப்பதிவு

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 70 சதவீதம் வாக்குப்பதிவான நிலையில், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் 74.80 சதவீதம் வாக்குப்பதிவானது.

Update: 2019-04-18 23:15 GMT
சிவகங்கை, 

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி), ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நாடாளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள மானாமதுரை தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

ஆனால் அதேநேரத்தில் 6 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,86,053. பதிவான வாக்குகள் 1,80,213. வாக்கு சதவீதம் 63. மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,63,454. பதிவானவை 1,97,073. பதிவான சதவீதம் 74.80. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,81,145. பதிவானவை 1,91,780. வாக்கு சதவீதம் 68.21. காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 3,00,926. பதிவானவை 1,91,800. வாக்குப்பதிவு சதவீதம் 63.74.

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,03,391. பதிவானவை 1,56,968. பதிவான சதவீதம் 77.18. திருமயம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,15,421. பதிவானவை 1,57,280. சதவீதம் 73.01.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மொத்த வாக்கு சதவீதம் 70 ஆகும்.

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது காரணமாக பல இடங்களில் காலதாமதமாக ஓட்டு பதிவு நடைபெற்றது. மேலும் இந்த பகுதியில் கடும் வெயில் காரணமாக வாக்குப்பதிவில் மந்தமான நிலை காணப்பட்டது. வாக்குச்சாவடிகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் அதிக அளவில் வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்றதால் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் மானாமதுரை தொகுதியில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் 74.80 சதவீத வாக்கு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்