திருச்சி விமான நிலையத்தில் 25 பவுன் தங்க தகடு பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது.
திருச்சி,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, சென்னையை சேர்ந்த ரஷீத்உசேன் (வயது 29) என்பவர் 25 பவுன் தங்கத்தை தகடாக மாற்றி, ‘ஐபேடு’ ஒன்றில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து ரஷீத்உசேனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.6 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.