ஏலச்சீட்டு நடத்தியவரை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது
காஞ்சீபுரத்தில் ஏலச்சீட்டு நடத்தியவரை கம்பியால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பத்ரகாளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் செல்வம் (வயது 37). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் சீட்டு கட்டிய அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் கடந்த 3 மாதங்களாக சீட்டு பணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. பணம் தருமாறு செல்வம், மணியிடம் பலமுறை கேட்டார். ஆனால் பணம் கட்டாததால் ஏலச்சீட்டில் இருந்து மணியை செல்வம் நீக்கினார்.
இதனால் அதே பகுதியை சேர்ந்த மணியின் நண்பர் வெங்கடேசன் என்கிற அப்பாச்சி (35) என்பவர் செல்வத்திடம் சென்று, ‘ஏன் மணியை நீக்கினாய்?’ என்று கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரும்பு கம்பியால் செல்வத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த செல்வம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். செல்வத்தை தாக்கியதாக கூறப்படும் வெங்கடேசன் என்கிற அப்பாச்சியை நேற்று கைது செய்தார்.
பின்னர் வெங்கடேசனை காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் சிறையில் அடைத்தனர்.