மீஞ்சூரில் 2 ஆட்டோ டிரைவர்கள் கிணற்றில் பிணமாக மிதந்தனர் கொலையா? போலீசார் விசாரணை

மீஞ்சூரில் 2 ஆட்டோ டிரைவர்கள் கிணற்றில் பிணமாக மிதந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-04-13 22:03 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூர் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்டது கலைஞர் நகர். இங்குள்ள கிணற்றில் 2 உடல்கள் நீரில் மிதப்பதாக மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் கிடந்த உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர்கள் மீஞ்சூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சம்பத்குமார் என்கிற காந்தி (35), எண்ணூர் பகுதியை சேர்ந்த அப்துல்கபூர் (30) என்பது தெரியவந்தது.

அவர்கள் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தனரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்