பொதுமக்கள் சொந்த ஊரில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது

பொதுமக்கள் சொந்த ஊரில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு நாளை(சனிக்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Update: 2019-04-11 21:30 GMT
திருப்பூர், 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் செய்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் நாளன்று திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று வரவும், வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களை முன்னிட்டு திருப்பூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து சேலத்திற்கு நாளை (சனிக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை கூடுதலாக 30 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு 13-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 130 பஸ்கள் இயக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு பஸ்களின் இயக்கம் தவிர வெளியூர்களுக்கு திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து 36 பஸ்கள், திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து 517 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ் வசதிகளை பஸ் நிலையத்தில் நாளை முதல் 19-ந்தேதி காலை வரை 10 அலுவலர்கள் மற்றும் சுமார் 20 பணியாளர்கள் கண்காணிக்கின்றனர்.

மேலும் செய்திகள்