விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர வாக்கு சேகரிப்பு

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2019-04-11 22:00 GMT
விக்கிரமசிங்கபுரம், 

நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று விக்கிரமசிங்கபுரம் நகரசபைக்கு உட்பட்ட 21 வார்டுகளுக்கும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அமலி பள்ளிக்கூடம் முன்பு, மெயின் ரோடு, அம்பலவாணபுரம் பெரியதெரு, இ.எஸ்.ஐ. மெயின் ரோடு, பூந்தோட்ட தெரு, ராமலிங்கபுரம் தங்கம்மன் கோவில் தெரு, வைத்திலிங்கபுரம் தெரு, மூன்று விளக்கு திடல், தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரதவீதி, சத்திரம் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கீழரதவீதி, சன்னதி தெரு, கட்டபுளி தெரு, சிவந்தியப்பர் மாடவீதி, கிருஷ்ணன் கோவில் முன்பு, புதுமனை தெரு, கொட்டாரம், தாமிரபரணி நகர், திருவள்ளுவர் நகர், மருதம்நகர், பொதிகையடி, டாணா, அனவன்குடியிருப்பு, அருணாசலபுரம், தெற்கு அகஸ்தியர்புரம், வடக்கு அகஸ்தியர்புரம், வடமலைசமுத்திரம், முதலியார்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சுந்தரபுரம், கருத்தையாபுரம், பசுக்கிடைவிளை, உச்சிமேட்டு தெரு, அய்யனார்குளம், கட்டபொம்மன் காலனி உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர் ஞானதிரவியம் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், “மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் நல்லாட்சி மலரவும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தவும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

பிரசார நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் பரணி சேகர், நகர அவை தலைவர் அதியமான், மாநில தேர்தல் பணிக்குழு ராஜம்கான், நகர காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை, வின்சென்ட், ம.தி.மு.க. நகர செயலாளர் பெரியசாமி, ஏ.ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க செயலாளர் முருகன், முஸ்லீம் லீக் மாவட்ட துணை தலைவர் கானகத்தி மீரான் உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்