தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்ற மோனோ ரெயில் : ½ மணி நேரம் சேவை பாதிப்பு

தொழில்நுட்ப கோளாறால் மோனோ ரெயில் நடுவழியில் நின்றது. இதன் காரணமாக சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக சேவை பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-11 00:02 GMT
மும்பை,

மும்பையில் செம்பூர் - வடலா - ஜேக்கப்சர்க்கிள் இடையிலான 11.28 கி.மீ. தூர முழு மோனோ ரெயில் வழித்தடம் கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது, முன்பைவிட அதிகளவில் பயணிகள் மோனோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று காலை மோனோ ரெயில் ஒன்று வடலா பணிமனை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அந்த ரெயில் நடுவழியில் நின்றது. இதனால் அந்த மோனோ ரெயிலில் இருந்த பயணிகள் பரிதவித்தனர்.

இதையடுத்து வேறொரு மோனோ ரெயில் மூலம் அந்த மோனோ ரெயில் வடலா பணிமனைக்கு இழுத்து செல்லப்பட்டது. அதன்பின்னர் மற்றொரு மோனோ ரெயிலில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் காரணமாக மோனோ ரெயில் சேவை சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

மேலும் செய்திகள்