வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-04-10 23:00 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லூரை சேர்ந்தவர் நாராயணன் (வயது 53). விவசாயி. இவர் தனது மோட்டார்சைக்கிளில் சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக நாராயணன் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெலமங்கலம் அருகே உள்ள கொத்தாண்டபள்ளியை சேர்ந்தவர் சின்னபில்லப்பா (60), தொழிலாளி. இவர் ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சின்னபில்லப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகலூர் அடுத்த தேவீரபள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணசெட்டி (62). இவர் அப்பகுதியில் உள்ள பாகலூர்-மாலூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணசெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்