அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதாக தி.மு.க. அரசு ஏமாற்றியது - அன்னூரில் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதாக தி.மு.க. அரசு ஏமாற்றியது என்று அன்னூரில் நடந்த பிரசாரத்தில் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.

Update: 2019-04-10 22:45 GMT
அன்னூர்,

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எம்.தியாகராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கோவை மாவட்டம் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தல் நமது தலையெழுத்தை மாற்றக்கூடிய தேர்தல். தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இங்கு வந்திருக்கிறேன். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

மத்தியில் பா.ஜனதா கட்சி, நரேந்திர மோடி தலைமையில் நல்லரசாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்தியாவை வளமான, வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றி இருக்கிறது. இந்தியாவில் மீண்டும் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி வர வேண்டும். ஜெயலலிதா ஆசியுடன், தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்காக நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் இணைந்து நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அன்னூரில் புறவழிச்சாலை, மின் மயானம் அமைய உள்ளது. தி.மு.க. அரசு அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவதாக ஏமாற்றியது. ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்த அ.தி.மு.க.அரசு தொடங்கி உள்ளது. இதனால் இது தண்ணீர் நிறைந்து செழிப்பான பகுதியாக மாறும்.

அன்னூர், அவினாசி, மோப்பிரிபாளையம் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தியாகராஜன் இந்த பகுதியை சேர்ந்தவர். உங்களிடம் நன்கு பழக கூடியவர். இந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பார். பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். மகளிருக்கு பல நல்ல திட்டங்களை மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. வளமான பாரதம், வலிமையான பாரதம். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது அவருடன் தேர்தல் பொறுப்பாளர்கள் ஏ.கே செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி ஆகியோர் உடன் இருந் தனர்.

மேலும் செய்திகள்