வானவில் : கேமரா சார்ஜர்

அறையைக் கண்காணிக்க உதவும் ஸ்பை கேமரா

Update: 2019-04-10 10:47 GMT
அறையில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிக்க, வீடியோ பதிவுகளாக எடுக்க உதவும் யு.எஸ்.பி. சார்ஜர் கேமராவை ஐ.எப்.ஐ. டெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை உங்கள் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்யும் சார்ஜராகவும் பயன்படுத்தலாம். அறையைக் கண்காணிக்க உதவும் ஸ்பை கேமராவாகவும் பயன்படுத்தலாம். இதில் 1080பி புல் ஹெச்டி கேமரா உள்ளது.

இது வை-பை மூலம் செயல்படத்தகுந்தது. அதேபோல அசையும் பொருட்களை பதிவு செய்யும் வகையிலான மோஷன் டிடெக்‌ஷன் சென்சார் உள்ளது. இந்த கேமராவில் வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளதால் அதிக அளவிலான பகுதிகளை இது பதிவு செய்யும். இதை உங்கள் ஸ்மார்ட போனுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

16 ஜி.பி. நினைவகம் உள்ளதால் இதில் அதிக அளவிலான வீடியோ பதிவுகள் பதிவு செய்ய முடியும். இந்த கேமராவை ஆன்செய்ய எவ்வித செட்டிங்கும் தேவையில்லை. இதை மின்சார சாக்கெட்டில் சொருகினால் போதும். இது தானாகவே காட்சிகளை பதிவு செய்யத் தொடங்கிவிடும்.

இதை கேபிள் மூலம் உங்கள் கம்ப்யூட்டருடன் இணைத்து காட்சிளை நேரடியாகப் பார்க்க முடியும். தேவையில்லாத சமயங்களில் மின் இணைப்பை துண்டித்துவிட்டால் கேமரா பதிவுகள் நின்றுவிடும். ஐ.எப்.ஐ.ஏ.டி.பி.டி.சி. 16 என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது. இதன் எடை 81 கிராம் ஆகும்.

இதன் நினைவகத் திறனை 128 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். இதன் விலை ரூ.2,350 ஆகும்.

மேலும் செய்திகள்