பார்ப்பதற்கு அழகிய வேலைப்பாடு மிகுந்த பீங்கான் மலர் குடுவை போன்று காட்சி தரும் இது இனிய இசையை உங்கள் அறை முழுவதும் பரப்பும் ஸ்பீக்கராகும். ஓ.இ. மார்ஸ் ஒன் எலகன்ட் 360 டிகிரி ஸ்பீக்கர் என்ற பெயரில் இது வெளி வந்துள்ளது.
மிகவும் சக்தி வாய்ந்த ஊபர் இருப்பதால் 200 வாட்ஸ் உயர் திறன் ஒலியை இது சிறப்பாக வெளிப்படுத்தும். இதன் வெளிப்பகுதி அலுமினியம் அலாயால் ஆனது. இதனால் துல்லியமான இசை அறை முழுவதும் பரவும்.
இதை வை-பை, புளூடூத், ஏ.யு.எக்ஸ். மற்றும் கேபிள் மூலம் இணைக்கலாம். இதை தொடர் உணர் மூலம் செயல்படுத்த முடியும். பியானோ போன்ற பெயிண்ட் இதற்கு அழகு சேர்க்கிறது.
நான்கு அடுக்குகளாக பூசப்பட்ட வண்ணம் நீடித்திருக்கும். கருப்பு, வெள்ளை வண்ணங்களில் வந்துள்ளது. உங்கள் இனிய இல்லத்துக்கு இனிய இசையுடன் அழகு சேர்க்கும் இந்த ஸ்பீக்கரின் விலை 499 டாலராகும் (ரூ.34,000).