வானவில் : குறைந்த விலையில் ஸ்மார்ட் டி.வி
அனைத்து தரப்பினரும் வாங்கி பயனடையும் வகையில் குறைந்த விலையிலான ஸ்மார்ட் டி.வி.
முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட் டி.வி.க்கள் அதிக விலைக்கு விற்பனையாகின்றன. ஆனால் அனைத்து தரப்பினரும் வாங்கி பயனடையும் வகையில் குறைந்த விலையிலான ஸ்மார்ட் டி.வி.க்களும் அறிமுகமாகி வருகின்றன.
அந்த வகையில் நோபல் ஸ்கியோடோ நிறுவனம் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. 24 அங்குல டி.வி.யின் விலை ரூ.6,999 மற்றும் 32 அங்குல டி.வி.யின் விலை ரூ.8,999 ஆகும். இந்த டி.வி.க்கள் அனைத்தும் ஸ்மார்ட் டி.வி.க்களுக்கு உள்ள அனைத்து சிறப்பு அம்சங்களும் இதில் உள்ளன.
வை-பை மற்றும் லான் இணைப்பு வசதிகள் உள்ளன. யூ-டியூப், மிரர்காஸ்ட், வெப் பிரவுசர் மற்றும் டுவிட்டர் ஆகிய பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் உள்ளன. இதில் உள்ள 24 அங்குலம் மற்றும் 32 அங்குல மாடல்களில் 1280 X 720 பிக்ஸெல் உள்ளன. இதில் 20 வாட் சவுண்ட் அவுட்புட் ஸ்பீக்கர்கள் உள்ளன. கூடுதலாக ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் யு.எஸ்.பி. போர்ட் ஆகியன உள்ளன.
இப்போது குறைந்த விலையில் எல்.இ.டி. டி.வி.க்கள் மட்டுமல்ல ஸ்மார்ட் டி.வி.க்களும் கிடைக்கின்றன. பொழுதுபோக்கிற்கு சிறந்த சாதனமாக விளங்கும் ஸ்மார்ட் டி.வி.க்களை வாங்கி நாமும் ஸ்மார்ட்டாக பொழுதை போக்கலாமே.