வானவில் : ஜே.வி.சி.யின் ஸ்மார்ட் டி.வி.க்கள்

துல்லியமான, இனிமையான இசையைக் கேட்கலாம்.

Update: 2019-04-10 09:21 GMT
நுகர்வோர் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானை சேர்ந்த ஜே.வி.சி. நிறுவனம் இந்திய சந்தைக்கென 6 ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த வியெரா குழுமத்தின் உதவியுடன் ஜே.வி.சி. டி.வி.க்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. 40 அங்குலம் முதல் 55 அங்குலம் வரையான வெவ்வேறு அளவுகளில் இவை வந்துள்ளன. இவற்றின் விலை ரூ.16,999-ல் தொடங்குகிறது.

புல் ஹெச்.டி. அல்லது 4 கே தொழில்நுட்பம் கொண்டவையாக இவை வந்துள்ளன. 40 அங்குலம், 43 அங்குலம், 49 அங்குலம், 55 அங்குல அளவுகளில் இவை வந்துள்ளன. புதிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய செயலிகளான ஹாட்ஸ்டார், அமேசான், பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், யூ-டியூப் ஆகியவற்றைக் கொண்டவையாக இவை வந்துள்ளன. மிராகேஸ்ட் மற்றும் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகத்தைக் கொண்டதாக இவை வந்துள்ளன.
 
இதற்காக இதில் குவாட் கோர் பிராசஸர்கள் உள்ளன. 50 வாட் சவுண்ட் அவுட் புட் 55 அங்குல டி.வி.யில் உள்ளது. இதிலிருந்து வெளிவரும் சவுண்ட் டால்பி சான்று பெற்றவை. இதனால் துல்லியமான, இனிமையான இசையைக் கேட்கலாம். இந்த ஸ்மார்ட் டி.வி.க்கள் அனைத்தும் வை-பை மற்றும் லான் (கேபிள்) மூலம் இணைக்கக் கூடியவை. இது தவிர ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. போர்ட் ஆகியன உள்ளன.

மேலும் செய்திகள்