வானவில் : பெங்களூர் டேஸ்

காரும் தமிழ் திரைப்படமும்... பெங்களூர் டேஸ்

Update: 2019-04-10 06:58 GMT
பெங்களூர் டேஸ் திரைப்படத்தில் வரும் இந்த கார் ஆஸ்டின் ஹீலே 3000 எனப்படும் ஒரு பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் காராகும்.1959-ம் ஆண்டு இந்த கார் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. ஜென்சன் மோட்டார்ஸ் என்னும் நிறுவனம் இதன் உதிரி பாகங்களை தயாரித்தது. முதலில் திறந்த அமைப்புடன் கூடிய ஸ்போர்ட்ஸ் வாகனமாக அறிமுகப்படுத்தப்பட்ட இக்கார், பின்பு குழந்தைகளுடன் குடும்பமாக நால்வர் அமரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன் பின், மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் கான்வெர்டிபில் காராக இதை மாற்றினர். பிரிட்டனில் தயாரான போதும் இந்த கார்களில் தொண்ணூறு சதவீதம் வடஅமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.1967-ம் ஆண்டு இதன் தயாரிப்பை நிறுத்திக் கொண்டது இந்நிறுவனம்.

மேலும் செய்திகள்