தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக புதுவையில் நாளை மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுவையில் நாளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.;
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக தொழிலதிபர் வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
இவர்களுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணியளவில் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான பந்தல் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பணிகளை தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டு முடுக்கிவிட்டுள்ளனர்.