சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சகோதரர்களுக்கு வாழ்நாள் சிறை; உடந்தையாக இருந்த மேலும் 3 பேருக்கும் சிறை தண்டனை
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சகோதரர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், இதற்கு உடந்தையாக இருந்ததற்காக கூட்டாளிகள் 3 பேருக்கு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
மதுரை,
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஆண்டு கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். இதுதொடர்பாக சிவகங்கையை சேர்ந்த சகோதரர்களான பர்மா பாண்டி, செல்வம், அவர்களுடைய கூட்டாளிகளான பிரபாகரன், சுலைமான், சிரஞ்சீவி ஆகிய 5 பேரை சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு மதுரை மாவட்ட மகிளா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது, கைதான 5 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்தார். சகோதரர்களான பர்மா பாண்டி, செல்வம் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அவர்களுக்கு உடந்தையாக இருந்த பிரபாகரன், சுலைமானுக்கு தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிரஞ்சீவிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். மேலும் 5 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.