வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் எவை? கலெக்டர் தகவல்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் எவை? என்பது குறித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அன்று, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சீட்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்லவேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்கண்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்கு அளிக்கலாம்.
அதன் விவரம் வருமாறு:-
பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு, வங்கி அல்லது தபால் அலுவலக புகைப்படத்துடன் கூடிய புத்தகம், மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நல அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய 11 ஆவணங்களை காண்பித்து வாக்கு அளிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.