பெருந்துறை நகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக ரோட்டில் தோண்டப்பட்ட குழிகளால் அடிக்கடி விபத்து
பெருந்துறை நகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக ரோட்டில் தோண்டப்பட்ட குழிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
பெருந்துறை,
பெருந்துறை நகரின் தெற்கு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.58 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குன்னத்தூர் ரோடு, காங்கேயம் ரோடு, ஈரோடு ரோடு, பவானி ரோடு, ரெயில் நிலைய ரோடு, சேலம்-கொச்சி நெடுஞ்சாலை ஆகிய ரோடுகளில் 250 இடங்களில் சுமார் 6 அடி ஆழம், 5 அடி அகலத்தில் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.
இதுதவிர பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் 1,650 இடங்களில் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட தார் ரோடுகளை வெட்டி, குழிகள் தோண்டப்பட்டதால் அதில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள்.
எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும் குன்னத்தூர் ரோட்டில் காவிரி குடிநீர் மேல்நிலை தொட்டியிருக்கும் இடத்திலிருந்து, செல்லாண்டி அம்மன் கோவில் வரையிலான ரோட்டில் குழிகள் சரியாக மூடப்படாததால் அடிக்கடி அங்கு விபத்து ஏற்படுகிறது.
முக்கியமான ரோடுகளில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாதது குறித்து பெருந்துறை நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் சாந்தியிடம் கேட்ட போது அவர், ‘பெருந்துறை நகரில் தற்போது நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் தெரிவித்துள்ளோம்.
இதற்காக, மாநில நெடுஞ்சாலையில், அவர்கள் குழி தோண்டி சேதப்படுத்திய தார் ரோடுகளை சீரமைக்க ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த மதிப்பீட்டு அறிக்கையை குடிநீர் வடிகால் வாரியத்திடம் அளித்துள்ளோம்.
தற்போது சேதப்படுத்தப்பட்ட ரோடு சீரமைப்புக்காக குடிநீர் வடிகால் வாரியம் முதல் தவணையாக ரூ.18 லட்சத்து 61 ஆயிரத்தை தந்துள்ளது. மீதமுள்ள சீரமைப்பு தொகை ரூ.2 கோடியே 64 லட்சத்தை குடிநீர் வடிகால் வாரியம் தரவேண்டியுள்ளது.
இந்த சீரமைப்பு தொகை தவணை முறையில் வரும்போது, அதற்கு ஏற்ப பணிகள் நடைபெறும். விரைவில் ரோடுகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிடும்‘ என்றார்.