தொல்.திருமாவளவனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

Update: 2019-04-09 22:45 GMT
மங்களமேடு,

சிதம்பரம் (தனி) தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வேப்பூர் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த கீழப்புலியூர், நமையூர், பெருமத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக நடந்து சென்று பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், குன்னம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் கனியமுதன், சேகுவரா, வழக்கறிஞர் அண்ணாதுரை, பேராசிரியர் தமிழ்குமரன், மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், ஒன்றிய செயலாளர் கதிரவன், தி.மு.க. நிர்வாகிகள் சன் சம்பத், அன்பழகன், புகழேந்தி, லட்சுமி கருணாநிதி, ஜாகீர் உசேன், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்