தேர்தல் விதிமீறல்: சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு
தேர்தல் விதிமீறல் தொடர்பாக, சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கு இருகட்டமாக வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவர், தேர்தல் ஆணைத்திடம் உரிய அனுமதி பெறாமல் ஒரு ஆட்டோவை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தற்போது அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் தேர்தல் அதிகாரி மூர்த்தி புகார் கொடுத்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் பிரகாஷ்ராஜ் ஆட்டோவை பயன்படுத்தியது, தேர்தல் நடத்தை விதிமீறலாகும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் பிரகாஷ்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.