நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தலில் முழு வெற்றியை தாருங்கள்: எடப்பாடி அரசுக்கு ஆயுள் தண்டனை வழங்குவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தலில் முழு வெற்றியை தாருங்கள். அதன்மூலம் எடப்பாடி அரசுக்கு ஆயுள் தண்டனை வழங்குவோம் என்று நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 18-ந் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல், மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தும் பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும் தேர்தல். நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் நம் அணியின் வேட்பாளராக, காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக, நீங்கள் அறிந்த வேட்பாளர், நீங்கள் புரிந்த வேட்பாளர். அதேபோல் உங்களை அறிந்து, புரிந்து வைத்திருக்கக்கூடிய வேட்பாளர் வசந்தகுமாருக்கு கை சின்னத்தில் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடித்தந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.
திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் உலகமே வியந்து பார்க்கும் வகையில் நம்முடைய தமிழ் சிற்பி மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை வைத்த கன்னியாகுமரிக்கு நான் வந்திருக்கிறேன். அந்த வள்ளுவருக்கு உங்கள் சார்பில் இந்த மேடையில் இருந்து நான் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
தலைவர் கருணாநிதி நம்மோடு இருந்திருந்தால் இந்நேரம் அவர் இந்த மேடைக்கு வந்திருப்பார். உங்களிடத்தில் ஆதரவு கேட்டிருப்பார். வசந்தகுமாரை வெற்றிபெற வையுங்கள், கை சின்னத்தில் ஆதரவு தாருங்கள் என்று உங்களிடம் கேட்டிருப்பார். மேடையில் அனைவரின் பெயரையும் கூறிவிட்டு, நிறைவாக இங்கு குழுமியிருக்கிற உங்களை எல்லாம் பார்த்து கரகரத்த குரலில், காந்த குரலில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே என அழைத்திருப்பார். காஞ்சி தந்த வள்ளுவன், அண்ணாவுக்கு அருகில் இன்று அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பதிலாக, அவருடைய மகனாக ஸ்டாலின் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். கருணாநிதிக்கு பதிலாக என்று நான் சொல்லக்கூடாது. அவருக்குப்பதிலாக யாரும் வரமுடியாது. இருந்தாலும் அவரது வார்ப்பாக, அவரால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்டாலினாக உங்களிடத்தில் வாக்கு கேட்க நான் வந்திருக்கிறேன்.
குமரிக்கும், தி.மு.க.விற்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. குமரி மாவட்டம் அமைவதற்கு முன்பே இந்த மாவட்ட மக்களுக்காக போராடிய, வாதாடிய கழகம்தான் தி.மு.க. என்பதை நான் பெருமையோடு பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். இந்த மாவட்டத்தில் தி.மு.க.வை வளர்க்க பாடுபட்ட பலர் தி.மு.க.வை வளர்த்த தியாகிகளாக சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் இன்றுவரை தி.மு,க, கோட்டையாக இருந்து வருகிறது. எனவே அப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்த தொகுதியில் நமது வேட்பாளராக, கூட்டணி வேட்பாளராக, காங்கிரஸ் கட்சி வேட்பாளராக, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக வசந்தகுமார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார் என சொல்லமாட்டேன், உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கை சின்னத்தில் மிகப்பெரும் அளவில் ஆதரவு தந்து வெற்றியை தேடித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால் அதே நேரத்தில் நம்மை எதிர்க்கிற கட்சிகள், வேட்பாளர்கள், எதிர்க்கிற அமைப்புகள் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என்று சொன்னால் மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி ஐந்து ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற ஆட்சி. மாநிலத்தில் இருக்கிற ஆட்சி எட்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற ஆட்சி. அவர்கள் தங்களது ஆட்சிகளில் என்ன செய்தோம் என்பதை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். ஆனால் அவர்களால் சாதனைகளை எடுத்துச்சொல்ல முடியவில்லை. காரணம் சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். ஆக எதுவும் இல்லை. அதற்கு நேர்மாறாக நம்மை விமர்சிக்கின்ற, தாக்கிப்பேசுகிற, தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேசுகிற நிலையில்தான், மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆட்சியில் இருப்பதைப்போல நம்மைப்பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். அதுதான் விந்தையிலும் விந்தையாக, வேடிக்கையாக இருக்கிறது.
தி.மு.க. மத்தியில் அங்கம் வகித்த நேரத்தில் எதாவது செய்தார்களா என கேட்கிறார்கள். நீங்களும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் சிலவற்றை அடையாளம் காட்ட விரும்புகிறேன். குறிப்பாக மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அவரது ஆட்சி காலத்தில் அங்கம் வகித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போராடினார். அதன்பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயர், உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து, சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், 90 ரெயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், சேதுசமுத்திர திட்டம். சென்னை அருகே ஓரகடத்தில் தேசிய ஆட்டோ மொபைல். விவசாயிகள் நலனை மனதில் கொண்டு ஒட்டுமொத்த விவசாயிகளின் ரூ.72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மத்திய அரசின் உயர்கல்வியில் நிலுவையில் இருக்கும் நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. பாமரர்கள் கையில் செல்போன் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆ.ராசா மத்தியில் அமைச்சராக இருந்தது தான்.
மத்தியில் மோடி பிரதமராக இருக்கிறார். அவர் கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களை சந்தித்தபோது என்ன சொன்னார்? நான் பிரதமராக வந்தால், மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வானத்தை கிழிப்பேன், வைகுண்டத்தை காட்டுவேன் மணலைக்கூட கயிறாக திரிப்பேன் என்று அளவுக்கதிகமான வாக்குறுதிகளை தந்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நான் பிரதமராக வந்தால் கன்னியாகுமரியை சர்வதேச உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றுவேன். என்றார். மாற்றியிருக்கிறாரா?. இலங்கை கடற்படையால் ஒரு மீனவர்கூட சாகமாட்டார்கள், கைது செய்யப்பட மாட்டார்கள் என்றார்கள். 5 ஆண்டு காலமாக எத்தனை மீனவர்கள் சாகடிக்கப்பட்டுள்ளனர். கைதுகள் தொடர்ந்து நடநது கொண்டேதான் இருக்கிறது. நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை சிறையில் அடைபட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஒரு பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படையால் பல பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கிறது. இதை இரண்டையும் தீர்த்து வைக்க இதற்கென ஒரு கண்காணிப்பு குழு அல்லது அமைப்பு ஏற்படுத்தப்போகிறேன் என்றார். சொல்லி 5 ஆண்டுகள் ஆகிறது, அது அமைக்கப்பட்டு இருக்கிறதா? அதை அமைப்பதற்கான ஒரு சூழ்நிலையாவது உருவாகியிருக்கிறதா? எதுவும் உருவாகவில்லை. ஆக வாயில் வடை சுடுவதில் மோடி கில்லாடி.
ஆனால் வசந்தகுமாரை எதிர்த்து நிற்கும் பொன்.ராதாகிருஷ்ணன் மோடியின் சிஷ்யனான அவரும் கடந்த தேர்தலில் எண்ணற்ற வாக்குறுதிகளை வாரி, வாரி வழங்கினார். குமரி மாவட்டத்துக்கு 63 உறுதிமொழி கொடுத்திருக்கிறார். பிரதமர் வாயில் வடை சுட்டார், பொன்.ராதாகிருஷ்ணன் அடை சுட்டார். குமரியில் ஸ்மார்ட் சிட்டி கொண்டுவருவேன், தொழில்நுட்ப பூங்கா அமைப்பேன், சித்த மருத்துவ கழகம் கொண்டு வருவேன், விவசாய கல்லூரி உருவாக்கி தருவேன், புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைப்பேன், தடிக்காரன்கோணத்தில் ரப்பர் பூங்கா அமைப்பேன், கன்னியாகுமரியில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைப்பேன், மணக்குடி காயலில் சுற்றுலா மையத்தை அமைப்பேன், மலர் சாகுபடி ஊக்குவிப்பேன், காய்கறி, மீன் சேமிப்பு கிடங்குகள் அமைப்பேன், நாகர்கோவிலை சுற்றி சுற்றுச்சாலை அமைப்பேன், குமரியில் ரெயில்வே கோட்டம் அமைப்பேன், மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை செய்து தருவேன், காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரேடார் வசதியுடன் ஹெலிகாப்டர் தளம் என்றார்.
இன்னும் இருக்கிறது. இதில் எதையாவது செய்திருக்கிறாரா? சுசீந்திரம் பாலம் தவிர வேறு எதுவும் அவர் செய்யவில்லை. அதனால்தான் இவர் வாயில் அடை சுட்டுள்ளார் என்று சொன்னேன். நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய மந்திரியாக இருந்து அவர் பணியாற்றியுள்ளார். இந்த பொறுப்புகளில் இருந்தும் இதை எல்லாம் அவர் செய்யவில்லை.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை நாம் வெளியிட்டுள்ளோம். விவசாய கடன்களை ரத்து செய்ய முடியுமா? என்று கேட்கிறார்கள். மோடியும் கேட்டார். மத்திய பிரதேசத்தில், ராஜஸ்தானில், சட்டீஸ்கர் மாநிலங்களில் இந்த அறிவிப்பை செயல்படுத்தவில்லையா? அதைத்தான் ராகுல்காந்தி திரும்பவும் கூறியிருக்கிறார். நாங்கள் சொன்னதைச் செய்வோம், செய்வதை சொல்வோம். மத்தியில் நாம் எதிர்பார்க்கும் ஆட்சி அமைந்தால் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை நிறைவேற்றுவோம். மோடி அரசு சர்வாதிகார அரசு. தமிழகத்தில் உள்ள எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி உதவாக்கரை ஆட்சி. இரண்டுபேரும் நாட்டை குட்டி சுவராக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இவர்களை வீட்டை விட்டல்ல, நாட்டைவிட்டே விரட்ட வேண்டும். அதற்காகத்தான் நாம் இங்கே குழுமி இருக்கிறோம்.
நான் பிரசாரத்தை தொடங்கிய நாள் முதல் மூன்று கேள்விகளை கேட்டு வருகிறேன். முதல் கேள்வி கொடநாடு கொலை விவகாரம். அதுபற்றி நான் பேசக்கூடாது என கோர்ட்டில் தடை வாங்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஐகோர்ட்டு தடைவிதிக்கவில்லை. அதனால் மேல் முறையீடுக்கு சென்று இருக்கிறார்கள். இனி சொல்லக்கூடாது என சொன்னாலும் பிரச்சினை இல்லை. தமிழகத்தில் பாதி இடங்களில் சொல்லிவிட்டேன்.
இரண்டாவது ஜெயலலிதா மரணம். அது மர்மமான முறையில் நடந்துள்ளது. அதை நானோ? இங்கிருப்பவர்கள் யாருமோ? சொல்லவில்லை. அதை சொன்னவர் துணை முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர் செல்வம். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டவரும் அவர்தான். ஜெயலலிதா மறைந்ததும் முதல்-அமைச்சராக இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து நீக்கியபோதுதான் இதை அவர் சொன்னார். தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி என்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. ஆறுமுறை சம்மன் அனுப்பியும் ஓ.பி.எஸ். ஆஜராகவில்லை. இதற்கு காரணமானவர்களை நாம் கண்டுபிடித்து சிறையில் அடைப்போம். அப்போது அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் திருப்தி அடைவார்கள்.
மூன்றாவது பொள்ளாச்சி சம்பவம். 200-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் எவ்வளவு பெரிய கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஏழு ஆண்டுகளாக நடந்து இருக்கிறது. அந்த மாவட்டத்தில் காவல்துறை, உளவுத்துறை இல்லையா? நானும் ஒரு பெண்ணை பெற்றவன் தான். இங்கு இருப்பவர்கள் அத்தனை பேரும் குழந்தைகளை பெற்றவர்கள்தான். ஒரு தந்தையாக இருந்து நினைத்துப்பாருங்கள். குற்றம் செய்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் இந்த ஆட்சி நடக்கிறது. இதைவிட கொடுமை என்னவாக இருக்க முடியும்?. இந்த 3 கேள்விகளைத்தான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். வருகிற 16-ந் தேதி வரை கேட்பேன். தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபிறகு கேள்வி கேட்கமாட்டேன், தண்டனை தரக்கூடிய அந்த இடத்தில் இருந்து அதனை நிறைவேற்றும் நிலையில்தான் இருப்போம். அதற்கு நீங்கள் இந்த 3 கொடிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று சொன்னால் இந்த தேர்தலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஒன்றை மட்டும் மிகுந்த பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். தலைவர் கருணாநிதி இன்று நம்மிடம் இல்லை. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் அவர். அந்த தலைவர் மறைந்த நேரத்தில் அவருடைய உடலை அவரது விருப்பப்படி அடக்கம் செய்ய நாம் என்னென்ன கொடுமைகள் அனுபவித்தோம். கலைஞரின் மரணத்தில் கூட சித்ரவதை செய்த கூட்டம் எடப்பாடி அரசு.
அண்ணா அருகில் இடம்தர மறுத்த அரசு. எடப்பாடிக்கு பதிலடி கொடுக்க, பாடம் புகட்ட புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 இடங்களிலும், 18 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் 18-க்கு 18 இடங்களிலும் எங்களது கூட்டணிக்கு வெற்றியினை தாருங்கள். அந்த வெற்றியின் மூலம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் வரவேற்று பேசினார். எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பேசினார். நகர செயலாளர் மகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மனோதங்கராஜ், ஆஸ்டின் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பகலவன், தி.க.வை சேர்ந்த வெற்றிவேந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஷாஜகான், காமராஜர் ஆதித்தனார் கழகத்தை சேர்ந்த சிலம்பு சுரேஷ் மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.