நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி, முதல் கட்டமாக 3 சட்டசபை தொகுதிகளில் நடந்தது.
நாகர்கோவில்,
வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் எந்திரத்தில் 15 வேட்பாளர்கள் மட்டுமே இடம்பெற முடியும். 16-வதாக நோட்டா இடம்பெறும். இதற்குமேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் கூடுதலாக ஒரு எந்திரத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் கன்னியாகுமரி தொகுதியில் 15 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பதால் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் மட்டுமே பயன்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள உதவும் வி.வி.பேட் என்ற கருவியும் பயன்படுத்தப்பட இருக்கிறது.
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், நேற்று வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் புகைப்படம், சின்னங்கள் ஆகியவற்றுடன் கூடிய தாள் பொருத்தும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக நாகர்கோவில், கிள்ளியூர், குளச்சல் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் தாள் இணைக்கும் பணி நடந்தது.
2-வது கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி, பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்காக பெல் நிறுவனத்தில் இருந்து 12 என்ஜினீயர்கள் வந்துள்ளனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் மலையாள மொழியில் இருந்தது. அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதேபோல கல்குளம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சின்னங்கள் பொருத்தும் பணியையும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் சரண்யா அரி உடனிருந்தார்.
பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியை தொடங்கியுள்ளோம். முதல்கட்டமாக நாகர்கோவில், கிள்ளியூர், குளச்சல் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னங்களுடன் கூடிய தாள் இணைக்கும் பணி நடைபெறுகிறது.
இதற்காக பெல் நிறுவனத்தில் இருந்து 12 என்ஜினீயர்கள் வந்துள்ளனர். அவர்கள் வி.வி.பேட் கருவியில் அதாவது வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வசதியைக்கொண்ட கருவியில் மென்பொருள் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
சின்னங்கள் பொருத்தும் பணி முடிவடைந்த பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தை பரிசோதனை செய்து அந்தந்த சட்டசபை தொகுதிக்கான பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்படும். அதன்பிறகு மீண்டும் 17-ந் தேதிதான் பாதுகாப்பு அறைகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் குமரி மாவட்ட வாக்காளர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். நீங்கள் அனைவரும் தேர்தல் அன்று வந்து வாக்களியுங்கள்.
இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.